இலங்கைமுக்கிய செய்திகள்
ஜனாதிபதியின் உருவப்படத்துடன் 5000 ரூபாய் நாணயத்தாள் விவகாரம்.
சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் தாள்கள் எனும் தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை நடத்திவரும் போலீசார், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர். நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்று, அந்த நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.