இலங்கைமுக்கிய செய்திகள்

இலங்கை சுங்க திணைக்கள முன்னாள் அதிகாரிகள் நால்வர் 35 வருடம் சிறை: 125 மில்லியன் ரூபா இலஞ்சம்!

 

இலங்கை சுங்க திணைக்களத்தின் நான்கு முன்னாள் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக 125 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே நேற்றைய தினம் (06) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 35 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் 125 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button