இலங்கைமுக்கிய செய்திகள்

இத்தாலிய சுற்றுலா பயணி பதுளை ஹோட்டலில் மரணம்

 

பதுளை எல்ல பிரதேசத்தில் சுற்றுலா வருகை புரிந்த 49 வயதான இத்தாலிய நாட்டவரான கபோனேரி எண்ட்ரியா, தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்பாக சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (நவம்பர் 6) அதிகாலை 4:30 மணியளவில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டின் மூலம் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button