சமூகம்முக்கிய செய்திகள்
சமூக ஊடக மோசடிகள்: பொதுமக்களுக்கு அரசின் எச்சரிக்கை!
சமூக ஊடகங்கள் மூலம் பரவலாக நடைபெறும் நிதி மோசடிகளுக்கு எதிராக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவும் இணைப்புகள் மற்றும் OTP-க்களை கிளிக் செய்யாமல் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.