இலங்கைமுக்கிய செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்: ஓட்டுநர் உரிமம் ரத்து

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இன்று வரை, 3,000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, ஜனவரி மாதம் முதல் இதுவரை 3,249 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். இவ்வாறு ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம், ஓட்டுநர்கள் செய்த பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட தண்டனையாகும்.

இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் பேராசிரியர் மொஹமட் மஹீஷ் தெரிவித்துள்ளார். வாகனங்களை இயக்குவதற்கு முன் அவற்றின் நிலையை சரிபார்ப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், நாட்டின் சாலைகளில் உள்ள குறைபாடுகளும் விபத்துக்களுக்கு ஒரு காரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button