இலங்கைமுக்கிய செய்திகள்
ஶ்ரீலங்கன் விமான சேவைகளில் ஏற்படும் தாமதம் குறித்து அமைச்சர் கண்காணிப்பு விஜயம்
ஶ்ரீலங்கன் விமான சேவைகளில் அடிக்கடி ஏற்படும் தாமதங்கள் குறித்து பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
விமான நிலையத்தின் ஒவ்வொரு பிரிவையும் பார்வையிட்டு ஊழியர்களுடன் நேரடியாகப் பேசிய அமைச்சர், விமான தாமதம் ஏற்படும் போது பயணிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் ஒரு தனி அலகு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், விமான தாமதங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால், எதிர்காலத்தில் விமான சேவைகள் தாமதமாகுவதைத் தடுத்து, பயணிகளின் அசௌகரியங்களை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.