இலங்கைமுக்கிய செய்திகள்
மருதானை புகையிரத குடியிருப்பில் சிறுமி மீது ஜீப் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்
மருதானை புகையிரத ஊழியர் குடியிருப்பில் நடந்த விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (10) பிற்பகல் நடைபெற்றுள்ளது.
சிறுமியின் தந்தை, தனது வாகனத்தை வீட்டின் பின்புறம் நிறுத்த முயற்சித்த போது, பின்னால் வந்த சிறுமி தற்செயலாக வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.