இலங்கைமுக்கிய செய்திகள்
சற்றுமுன் பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.