இலங்கைமுக்கிய செய்திகள்
சந்தேக நபரொருவர் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கைது!
சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 5000 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கண்டி பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.