இலங்கைமுக்கிய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் இடர்களை எதிர்கொள்வதற்கு தயார்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்…

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளனர்.

பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (22.11.2024) இடம்பெற்றுள்ளது.

வடக்கு ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,“ எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லையாயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும்.

பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் – செப்டெம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் துப்பரவாக்கப்பட்டிருக்கவேண்டும்.

சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை சட்டரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள். தேவையேற்படின் காவல்துறையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

அதேநேரம்,  பல இடங்களில் வாய்க்கால்களுக்குள், வீதிகளில் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள்.

அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுதான் வழி. பல தடவைகள் விழிப்புணர்வுகளை செயற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை ஊடாக தண்டிக்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button