இலங்கைமுக்கிய செய்திகள்
யாழ் பல்கலைக்கழக மாணவன் பேருந்து விபத்தில் உயிரிழப்பு
பதுளை (Badulla) பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கொத்தலாவல பல்கலைக்கழகத்தை சேர்ந்த யாழ். இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று (23.11.2024) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த யாழ். இந்துக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.