இலங்கைமுக்கிய செய்திகள்

இலங்கை கிரிக்கெட் குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர்; அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர்

17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒரநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இந்த குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

உப தலைவர் பதவி மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் செனுஜ வெகுங்கொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி ஆரம்பமாகிறது. கடைசிப் போட்டி டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறும்.

17 வயதின்கீழ் இலங்கை குழாம்….

கித்ம வித்தானபத்திரன (தலைவர்), செனுஜ வெகுங்கொட (உப தலைவர்), ஜேசன் பெர்னாண்டோ, ஜொசுவா செபஸ்தியன், ரெஹான் பீரிஸ், துல்சித் தர்ஷன, ஜனிந்து ரணசிங்க, செத்மிக செனவிரத்ன, சலன தினேத், ராஜித்த நவோத்ய, விக்னேஸ்வரன் ஆகாஷ், கெனுல பிலியங்க, ரெயான் கிரகறி ரசித் நிம்சார, ஓஷந்த பமுதித்த

India’s captain Virat Kohli plays a shot during the fourth Twenty20 international cricket match between New Zealand and India at Sky Stadium in Wellington on January 31, 2020. (Photo by Marty MELVILLE / AFP)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button