இலங்கைமுக்கிய செய்திகள்

மன்னார் தாய் – சேய் மரணங்கள் : முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

மன்னாரில் நிகழ்ந்த தாய்- சேய் மரணங்களை வைத்து பல அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் (Rehabilitated Tamil LTTE)) தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று (24) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள், ”இரண்டு நாட்கள் மன்னார் வைத்தியசாலை பூட்டப்படுமானால் இன்று இழந்திருக்கும் ஒரு தாயைப் போல பல தாய்மாரை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இந்த விடயத்தினை வைத்து அரசியல் வாதிகளும் பிற அமைப்புக்களும் அரசியல் செய்கின்றனர். நீங்கள் சிந்திக்க வேண்டியது உங்களுடைய அரசியலை உங்களுடன் வைத்திருங்கள் மக்களிடம் திணிக்க வேண்டாம்.

குறித்த மரணங்கள் தொடர்பில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தவறிழைத்திருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த சம்பவங்களை நிரூபிக்க முடியாதவராக வைத்தியர் அர்ச்சுனா 13 நாட்கள் சிறையில் இருந்தார். மக்களுக்காக சிறை சென்றவராக இருந்தால் அவர் வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபித்திருக்க வேண்டும். அப்போது அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கும்” என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button