நீடித்து வந்த எரிவாயு தட்டுப்பாடு: லாப் நிறுவனம் அறிவிப்பு
பல மாதங்களாக நீடித்து வந்த லாப் எரிவாயு தட்டுப்பாடு நேற்றுடன் (24.11.2024) முடிவுக்கு வந்துள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு பற்றாக்குறையால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சூழல் காரணமாக எரிவாயு ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் குறித்த எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எரிவாயு சரக்குக் கப்பல் ஒன்று நேற்றையதினம் (24.11.2024) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.
இதன்படி விநியோக நடவடிக்கைகள் இன்று (25.11.2024) முதல் ஆரம்பமாகவுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே. வேகபிடிய தெரிவித்துள்ளார்.
மேலும், எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) வர்த்தமானி அறிவித்தல் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.