இலங்கைமுக்கிய செய்திகள்

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர..

இலங்கையின்(sri lanka) 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட  அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நேற்று (24) தனது 56ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை மையமாக வைத்து நிறைவேற்றப்பட்ட இந்திய(india)  இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1968 இல் பிறந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் தனது கல்வியை ஆரம்பித்து பின்னர் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் உயர்தர படிப்பை தொடர்ந்தார்.

1992 இல், களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு அனுமதி பெற்ற அவர் 1995 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

அவரது அரசியல் பயணம் அவரது பல்கலைக்கழக ஆண்டுகளில் தொடங்கியது, 1987 இல் சோசலிச மாணவர் சங்கத்தில் ஒரு செயல்பாட்டாளராக ஆனார். அங்கு அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

அதே ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியான போராட்டங்களில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button