இலங்கைமுக்கிய செய்திகள்

உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உரிய பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு (G.C.E A/L Exam) தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகள் தடைப்பட்டால் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அந்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏதாவது பிரச்சினை காணப்பட்டால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அனர்த்தங்களினால் ஏற்பட்ட போக்குவரத்து தடைகளினால் பரீட்சை நிலையங்களுக்கு வருவதில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், அது தொடர்பில் நிவாரணம் வழங்க பரீட்சை நிலையங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button