இலங்கைமுக்கிய செய்திகள்

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வுகளை கண்காணிப்பதற்கான ஆலோசனைகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்றும் (26.11.2024), நாளையும் (27.11.2024) வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கின் அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் சில நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாவது, “வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், தெற்காக இருந்தாலும் மலையகமாக இருந்தாலும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்குரிய உரிமை உள்ளது.

இதற்கு நாம் எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தவில்லை. நினைவேந்தல் நிகழ்வை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.

தமது பிள்ளைகளை, உறவுகளை அவர்களின் சொந்தங்கள் நினைவுகூரும்போது அவர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர் எனக் காட்ட முற்படவும் கூடாது.

எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பானது  இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்.

அந்த அமைப்பின் இலட்சினைகள், படங்களைப் பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பாதுகாப்பு அமைச்சின் சார்பில் இராணுவத்தினருக்கு கண்காணிப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button