இலங்கைமுக்கிய செய்திகள்
வீதியை விட்டு விலகிய பேருந்து – அதிர்ச்சியில் பெண் ஒருவர் மரணம்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளானதால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புனாவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் இன்று (26-11-2024) அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மழை காரணமாக சாலையில் ஏற்பட்ட வழுக்கும் நிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் இதயநோயாளி என்றும், பேருந்து கவிழ்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியில் பேருந்துலேயே உயிரிழந்ததாகவும் பேருந்து ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், புனாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.