இலங்கைமுக்கிய செய்திகள்

சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த செய்திகள்-உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த செய்திகள் குறித்துத்தான் ஏகத்துக்கும் தகவல்கள் பரவி வருகின்றன. சுதா கொங்குரா இயக்கும் அந்த படத்தில் ஜெயம்ரவி, அதர்வா என பலரும் நடிக்கின்றனர். டெஸ்ட் ஷூட் கூட, நடந்து வருகிறது என்பது போன்ற தகவல்கள் உலா வருகின்றன.

சமீபத்தில் வெற்றி பெற்ற ‘அமரன்’ படத்தை அடுத்து, சிவா நடிப்பில் அடுத்து வெளிவரும் படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் இருக்கின்றது. இது சிவாவின் 23வது படமாகும். இதில் கன்னடத்தின் ‘சப்த சாகரடாச்சே எல்லோ’, தமிழில் விஜய்சேதுபதியின் ‘ஏற்’ ஆகிய படங்களின் நாயகி ருக்மிணி வசந்த் ஹீரோயின். பிஜூ மேனன், டான்ஸிங் ரோஸ் சபீர், விக்ராந்த், வித்யுத் ஜம்வால் எனப் பலரும் நடித்து வருகின்றனர். ‘அமரன்’ படத்திற்காக முறுக்கேறிய உடம்பை ஏற்றி வந்த சிவா, அதன் தொடர்ச்சியாக முருகதாஸின் படத்திலும் ஆக்‌ஷனுக்கான தோற்றத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button