இலங்கைமுக்கிய செய்திகள்

கனமழையால் கடும் சிரமத்திற்கு மத்தியில் மக்கள்

கிளிநொச்சியில் (Kilinochchi) சீரற்ற வானிலையால் காரணமாக தொடர்ச்சியாக இன்று பெய்து வருகின்ற கனமழை காரணமாக வீதிகள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் 721 குடும்பங்களும் 2476 அங்கத்தவர்களும் 7 வீடுகள் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 16 கிராமங்களில் 422 குடும்பங்களும் 1554 நபர்கள் மூன்று பகுதி அளவிலான வீடுகள் பாதிக்கப்பட்டது.

அதேபோன்று கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 7 கிராமங்களில் 115 குடும்பங்களும் 278 நபர்கள் 3 வீடுகள் பாதிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் ஐந்து கிராமங்களில் 4 குடும்பங்களும் பத்து நபர்கள் ஒரு வீடும் பாதிக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராமங்களில் 180 குடும்பங்களும் 634 அங்கத்தவர்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்ற மையால் மாவட்டத்தில் உள்ள சிறு குளங்கள் கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிறமந்தனாரு குளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button