இலங்கைமுக்கிய செய்திகள்
அஸ்வெசும கொடுப்பனவு விண்ணப்ப அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, இதுவரை நிவாரணப் பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் மிகவும் சீரற்ற காலநிலையால் மக்கள் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதனை கருத்திற்கொண்டு மீண்டும் ஒருமுறை நேரம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.