இலங்கைமுக்கிய செய்திகள்
ஹொலிவூட்டில் யோகி பாபு
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு ‘ட்ராப் சிட்டி’ எனும் திரைப்படத்தின் மூலம் ஹொலிவூட்டில் அறிமுகமாகிறார் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹொலிவூட் இயக்குநர் டெல்.கே கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ட்ராப் சிட்டி’ எனும் ஆங்கில திரைப்படத்தில் பிராண்டன் ரி. ஜேக்சன், ஜே. ஜீஸி ஜென்கின்ஸ், நெப்போலியன், ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோருடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை கைபா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டெல் கே. கணேசன் தயாரித்திருக்கிறார்.
இசை துறையின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு ஆங்கில றாப் பாடல் ஒன்றுக்கு மைக்கேல் ஜேக்சனை போல் நடனமாடும் காட்சியும் இடம் பிடித்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.