இலங்கைமுக்கிய செய்திகள்
கம்பளை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குருமுல்ல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், அடபாகே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் ஆவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
இறந்தவர் வேறொருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து மிளகு பறிக்கச் சென்ற போது, காணியைச் சுற்றி போடப்பட்டிருந்த அனுமதியற்ற மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் ,சட்டவிரோதமான முறையில் மின்சார கம்பிகளை போட்ட காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான , மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.