இலங்கைமுக்கிய செய்திகள்

இலங்கையில் அதிகளவான எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளர்கள்

2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் இலங்கையில் அதிகளவான எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய எச்.ஐ.வி/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேசிய எச்.ஐ.வி/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2009ஆம் ஆண்டுக்கு பின்னர், அதிகளவான எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளர்கள், 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியிலே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் 214 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியை விட 18% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

2023ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் 181 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இரண்டாவது காலாண்டில் பதிவான நோயாளர்களில் 15-24 வயதுக்குட்பட்ட 28 ஆண்களும் மீதமுள்ள நோயாளர்கள் 25 வயதுக்கு மேற்பட்ட நபர்களாக காணப்படுகிறது.

2023இல் பதிவாகியுள்ள எச்.ஐ.வி நோயாளர்களில் ஆண்-பெண் விகிதம் 7:1 ஆக உள்ளது.

மேலும், இரண்டாவது காலாண்டில் எச்.ஐ.வி தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button