இலங்கைமுக்கிய செய்திகள்

இந்தியாவுடனான உறவை பலப்படுத்த வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

புதிய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூருக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் அந்த நகரத்தில் அமைந்துள்ள பல பழைய கோட்டைகள் மற்றும் அரச அரண்மனைகளைப் பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் தூய்மையான நகரமாக கருதப்படும் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி நிறுவனத்தில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற விசேட பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துக் கொண்டுள்ளார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் இந்திய விஜயம் இன்றுடன் நிறைவடைவதால் இன்று (29) இரவு நாடு திரும்பவுள்ளார்.

மேலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button