தமிழர் பகுதியில் சுற்றிவளைப்பில் சிக்கிய 17 வயது சிறுவன்
மட்டக்களப்பில்(Batticaloa) ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(06.12.2024) இடம்பெற்றுள்ளது.
கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் காவல்துறை பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
கைது நடவடிக்கை…..
இதன்போது, போதை பொருட்களை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த 17 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழர் பகுதியில் சுற்றிவளைப்பில் சிக்கிய 17 வயது சிறுவன் | A 17 Year Old Boy Was Arrested In Batticaloa
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் இருந்து 10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளும் பொதி செய்யப்பட்ட 650 மில்லிக்கிராம் கொண்ட 5 பக்கற் கேரளா கஞ்சாவும், 7 கிராம் 200 மில்லிக்கிராம் கேரளாககஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சிறுவன் கொக்குவில் காவல்துறையினரிடம் சான்று பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டதாகவும் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்