சி.ஐ.டியிடம் சிக்கிய வைத்தியர்: ஐம்பத்தைந்து மில்லியன் ரூபா மோசடி
தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனஹேன, வேபட பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை……
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த காவல்துறையினர் நடடிவக்கை எடுத்துள்ளனர்.
சி.ஐ.டியிடம் சிக்கிய வைத்தியர்: ஐம்பத்தைந்து மில்லியன் ரூபா மோசடி | Doctor Defrauded Of Fifty Five Million Rupees
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்