கஜேந்திரகுமார் எம்.பி பயணித்த வாகனத்தில் மோதி பெண் ஒருவர் பலி
அகில இலங்கை தமிழ்
காங்கிரஸின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) பயணித்த ஜீப்வண்டி, மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது கொழும்பு (Colombo) – புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் வைத்து நேற்றையதினம் (08.12.2024) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாசகம் செய்யும் பெண்…………
இந்த விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கஜேந்திரகுமார் எம்.பி பயணித்த வாகனத்தில் மோதி பெண் ஒருவர் பலி! | Gajendra Kumar Dies After Being Hit by Vehicle
மேலும் இந்த விபத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எம்.பியின் சாரதியான 60 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்