சமூகம்

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

புதிய இணைப்பு…..
யாழ் (Jaffna) வடமராட்சிப் பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ். வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (9.12.2024) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சங்கரன் தோட்டம், கரணவாய் தெற்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்ற திருமணமாகாத பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இவர் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், வீட்டுக்கு அருகாமையில் உள்ள பனங்காணி ஒன்றில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றாம் இணைப்பு…..
யாழ். (Jaffna) பருத்தித்திறை – வராத்துப்பளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் | Young Mother Death In Jaffna

சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து எனும் 42 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்திறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் காணப்பட்டு நேற்று மீட்கப்பட்டிருந்தது.

மூடிய கிணற்றிற்குள் சடலம்….
தனது தாயரை நேற்று முன்தினம் பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றவேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்துள்ள நிலையில் அக்கிணற்றை அவரது மகன் எட்டிப்பார்த்த வேளை கம்பி வலையால் மூடிய கிணற்றிற்குள் சடலம் காணப்பட்டுள்ளது.

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் | Young Mother Death In Jaffna

குறித்த நபர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் தான் அதன் வலி தாங்க முடியாது தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் தனது மரணத்திற்கு தானே காரணம் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு…..

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி, அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.

அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா (வயது – 32) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வீட்டிலிருந்த போது அவர் திடீர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்தே சிகிச்சை பயனளிக்காமல் அவர் உயிரிழந்தார். நெல்லியடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு….
யாழ். பருத்தித்துறை காவல்துறை பிரிவில் கற்கோவளம் – வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் | Young Mother Death In Jaffna

தனது தாயாரை நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்ற வேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடிப் பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்த நிலையில் அந்தக் கிணற்றை அவரது மகன் எட்டிப் பார்த்த வேளை சடலம் காணப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை…..
இவ்வாறு சடலமாகக் காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய தாயார் ஆவார்.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button