Uncategorizedஇலங்கைசெய்திகள்

அரசியல்வாதியை விரட்டியடித்த மக்கள்; நடந்தது என்ன..?

புத்தளத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கலந்து சென்ற இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை அந்தப் பகுதி மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

தளுவ கிராமத்தில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற வேளையில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த நேரத்தில் இராஜாங்க அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயதுன்னவும் இணைந்து கொள்ளவிருந்தார்.

அரசியல்வாதிகளின் வருகை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படை அந்தப் பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் புத்தளம் மாவட்டத்தின் தலுவ நிர்மலபுர நாவக்காடு உள்ளிட்ட வீதி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்தோடு     தளுவ கிராம மக்கள் நிர்மலபுர கத்தோலிக்க தேவாலய மைதானத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதுடன், அரச அதிகாரிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button