உலகம்

கனடாவில் வீட்டிலிருந்து வேலை செய்பவரின் எண்ணிக்கை வீழ்ச்சி: வெளியான தகவல்!

கனடாவில் இல்லத்திலிருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வீட்டிலிருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை 20 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று நிலைமைக்கு முன்னதாக நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்தோரின் எண்ணிக்கை வெறும் ஏழு சதவீதமாக காணப்பட்டதோடு பின்னர் அதிகளவானோர் வீட்டிலிருந்து வேலை செய்ய தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெருந்தொற்று காலப் பகுதியில் போக்குவரத்து பாரியளவில் சரிவடைந்திருந்தமை சுட்டிக்காட்டிடப்பட்டுளளது.

எவ்வாறெனினும் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் போக்குவரத்து செலவுகளை குறைக்க முடிவதோடு சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button