சானியா மிர்சாவை பிரிந்து வாழ்ந்த நிலையில் அதிர்ச்சி கொடுத்த சோயிப் மாலிக்!
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவைப் பிரிந்த முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் சோயிப் மாலிக் மறுமணம் செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து துபாயில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.
சமீப காலமாக நட்சத்திர தம்பதிகளான சானியா – சோயிப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. அவர்களின் பிரிவுக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.
இதற்கிடையே, இருவரும் பிரிந்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சானியா மிர்சா இன்ஸ்டாகிராம் பதிவில், “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி” எனப் பதிவொன்றை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை மறுமணம் செய்துள்ளார். சோயிப் மாலிக் தற்போது திருமணம் செய்துள்ள நடிகை சனா ஜாவேத்துக்கு இது இரண்டாவது திருமணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சோயிப் மாலிக்கிற்கு இது 3வது திருமணமாகும். ஏற்கனவே இவர் ஆயிஷா சிக்கிக்கி தான் முதல்முதலில் திருமணம் செய்திருந்தார். 2002 முதல் 2010 வரை ஒன்றாக இருந்த இவர்கள், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றமை குறிப்பிடத்தக்கது.