மன்னார் மடுவில் வசித்து வந்த நபர் யாழில் திடீர் மரணம்!
மன்னார் மடுவில் வசித்து வந்த நபர் யாழில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் வீட்டில் கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (20.01.2024) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (20.01.2024) காலை 09.00 மணியளவில் கதிரையில் அமர்ந்திருந்தார்.
தொடர்ந்து காலை 9.30 மணியளவில் அவரது சகோதரி அவரை எழுப்ப முற்பட்டவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் குறித்த நபர் மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு பகுதியில் திருமணம் முடித்து தற்காலிகமாக வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.