இலங்கை
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் போட்டியில் அதிகளவான வாக்கு வித்தியாசத்தில் ஸ்ரீதரன் வெற்றி!
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் போட்டியில் அதிகளவான வாக்கு வித்தியாசத்தில் ஸ்ரீதரன் வெற்றி பெற்றுள்ளார் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் (21) இடம்பெற்ற நிலையில் தொடர்ந்து வாக்கு என்னும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சற்றுமுன் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தது.
அதனடிப்படையில் ஸ்ரீதரன் 184 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
சுமந்திரன் 137 வாக்குகளை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.