இலங்கை
தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளராக ஸ்ரீநேசனின் பெயர் முன்மொழிவு!
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனின் பெயரை நான் முன்மொழிந்துள்ளேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கின்றார்.
மேலும், ஸ்ரீநேசன் பொதுச் செயலாளராக வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது என்று நாங்கள் அறிகின்றோம் எனவும் குறித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமி்ழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு தரப்பட வேண்டும் என்று நாங்கள் ஒரு முன்மொழிவினை வைக்கும் போது மட்டக்களப்பில் இருந்து பொதுச் செயலாளர் பதவிக்கு மற்றுமொரு பிரேரணை முன்வைக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.