இலங்கை

யாழில் தந்தையின் உதவியுடன் சாதனை படைத்த சிறுமி!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சமரபாகு நியூட்டன் வி்ளையாட்டு கழகத்தினரால் நேற்றையதினம் வியாழக்கிழமை (25) நடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டியின் ஓர் அங்கமாக இடம்பெற்ற மரதன் ஓட்ட போட்டியில் 10 வயது சிறுமி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

குறித்த சிறுமி மரதன் ஓடும் போது அவரது தந்தையும் கூடவே சென்று சிறுமிக்கு உற்சாகமளித்திருந்த காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்ததுடன், ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளுக்காக எவ்வளவு அர்ப்பணிப்புக்களை செய்கின்றனர் என்பதனை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில் மரதன் ஓட்டத்தை நிறைவு செய்து வெற்றியீட்டிய சிறுமிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button