இலங்கைமுக்கிய செய்திகள்
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி!
நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்றையதினம் (27) காலை முச்சக்கர வண்டியொன்று பாரவூர்தியுடன் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகிறது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினரால் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனமை குறிப்பிடத்தக்கது.