இலங்கைவிளையாட்டு
வவுனியாவில் இடம்பெற்ற பூப் பந்தாட்ட இறுதி போட்டி!
வவுனியா மாவட்ட பூப் பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட திறந்த பூப் பந்தாட்ட போட்டியின் இறுதி போட்டி நேற்று 27-01-2024 வவுனியா உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இவ் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக துணை வேந்தர் ரீ.மங்களேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எம்.சபர்ஜா அவர்களும் , வடமாகாண பூப் பந்தாட்ட சங்க தலைவர் திரு.கமலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்விற்கு எமது ஆதித்ரா செய்தி குழுமமும் நிதி அனுசரணை வழங்கி இருந்ததுடன் எமது ஆதித்ரா குழும தலைவர் நடராசா ஜனகதீபன் ( ஜனகன் நடராசா) அவர்களும் விருந்தினராக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.