யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் ஏற்பாட்டில் நாளைய தினம் இந்திய பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வருகை வந்துள்ள திரைப்பட நடிகர் நடிகைகளை சந்திப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ஒருவருக்கு ரூபா 30000 அறவிடப்படும் என குறித்த தனியார் நிறுவனத்தினால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியிருந்தது.
இந்த நிலையில் குறித்த விடயத்தை வன்மையாக கண்டித்ததோடு குறித்த செயற்பாடு இடம்பெறுமானால் நடிகர், நடிகைகள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் (08) யாழ் ஊடக அமையத்தில் மு.தம்பிராசா நடத்திய ஊடக சந்திப்பிலே குறித்த விடயத்தை வன்மையாக கண்டித்து இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.