இலங்கைமுக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் நேற்றிரவு பரபரப்பு: வாள் வெட்டு தாக்குதலில் ஐவர் படுகாயம்!

இராமநாதபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு 9 மணி அளவில் இரு குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மிளகாய் தூள் வீசி சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூன்று பேரை கைது கைது செய்துள்ளனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராமநாதபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button