இலங்கைமுக்கிய செய்திகள்
யாழில் இளம் ஆசிரியருக்கு நடந்த துயரம்: மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை!
யாழ்ப்பாணத்தில் மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது-32) எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியர் கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்த நிலையில், தொடர்ந்து யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.