யாழில் சிறுவனால் 15 வயது சிறுமி கடத்தல்: நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையிர், அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வீட்டிற்கு விரைந்து, சிறுமியை மீட்டதுடன் சிறுவனை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த காவல்துறையினர் கைது செய்யப்பட்ட சிறுவனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.