இலங்கைமுக்கிய செய்திகள்
யாழில் பல்கலை மாணவன் பலி: இன்று அதிகாலை சம்பவம்!
யாழில் இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் யாழ்.பல்கலைகழகத்தின் முதலாம் வருட கலைப்பிாிவு மாணவனான 22 வயதுடைய யாழ். மானிப்பாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் சகீந்தன் என்ற இளைஞரே இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.
சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸாா் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.