இலங்கை
பருத்தித்துறையில் வீதியால் சென்ற மாணவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல்!
யாழ். பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீதே இவ்வாறு வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.