அநுராதபுரம்- கல்கிரியாகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பலலுவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (31) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம், கலாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் பலலுவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் தற்காலிகமாகத் தங்கியிருந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.