இலங்கைசமூகம்முக்கிய செய்திகள்
செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடனும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் (02.08.2024) ஆரம்பமாகியுள்ளதோடு நாளைய தினமும் நடாத்தப்படவுள்ளது.
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.