இலங்கைசமூகம்முக்கிய செய்திகள்
வியாழேந்திரனின் செயலாளர் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
மட்டக்களப்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியோக செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (01) இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், கொழும்பு நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்குக்கு விண்ணப்பிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.