இலங்கைசமூகம்முக்கிய செய்திகள்
ஜனாதிபதிதஂ தேர்தல் தொடர்பில் 153 முறைப்பாடுகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 153 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை, நியமனங்களை வழங்கியமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய முறைப்பாடுகளே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய ஒரேயொரு முறைப்பாடு மாத்திரமே இதுவரை கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.