Royal Enfield-யின் முதல் மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்: Flying Flea C6!
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளான Flying Flea C6-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது ராயல் என்ஃபீல்டின் புதிய மின்சார வாகன பிரிவான Flying Flea-யின் முதல் தயாரிப்பு ஆகும். 1940-களில் வெளியான ராயல் என்ஃபீல்ட் Flying Flea மோட்டார் சைக்கிளை நினைவுகூரும் வகையில் இந்த புதிய வகை வாகனம் பெயரிடப்பட்டுள்ளது.
ரெட்ரோ-பியூச்சரிஸ்டிக்(retro-futuristic) வடிவமைப்பைக் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், வட்ட LED ஹெட்லைட் மற்றும் கிளாசிக் கிர்டர் ஃபோர்க்ஸ்(girder forks) போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்டுள்ளது. 17-இன்ச் சக்கரங்கள் இதனை ராயல் என்ஃபீல்டின் மற்ற பெரிய பெட்ரோல் வாகனங்களிலிருந்து வேறுபடுத்துகின்றன. நகர்ப்புற பயணத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள், வசதியான பயண நிலை மற்றும் 100-150 கிமீ வரையிலான திட்டமிடப்பட்ட வரம்பை வழங்குகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் மின்சார இரண்டு சக்கர வாகன சந்தையில், Revolt, Matter, Oben, Ola, Raptee போன்ற பிராண்ட்களுக்கு போட்டியாக Flying Flea C6 களமிறங்க உள்ளது.