இலங்கைமுக்கிய செய்திகள்
சற்று முன் வவுனியாவில் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன்!
சற்றுமுன் வவுனியா A-9 வீதியில் உந்துருளி ஒன்று சொகுசு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்த நிலையில் வவுனியா தெற்கு வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மகிழுந்து ஒன்றை முந்தி செல்ல முயன்ற வேளை, உந்துருளி மகிழுந்துடன் மோதி கட்டுப்பாட்டை இழந்து சொகுசு பேருந்துடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது உந்துருளியில் சென்ற இளைஞன் சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர்த்தப்பியுள்ளார்.